அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் ஆகிய இரண்டு கொள்கைகளின் அடிப்படையில், பெர்சத்து மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி அல்லது கூட்டணியுடனும் ஒத்துழைக்க பக்காத்தான் ஹராப்பான் எப்போதும் தயாராக இருப்பதாக, அதன் தலைவர் மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தவொரு ஒத்துழைப்பும் அரசியல் நிலைத்தன்மையையும் மக்களின் நலனையும் உறுதிசெய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பானுக்கும் பெர்சத்துவுக்கும் இடையே எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை என்றும், இதுதொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சிலாங்கூர் மந்திரி புசாருமான அமிருடின் மறுத்துள்ளார்.
எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து மத்திய அளவில் பகுத்தறிவுடன் ஆராயப்படும் என்றும், தேர்தல் நடத்தப்படும் காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








