காஜாங், ஆகஸ்ட்.12-
பல்பொருள் விற்பனைக் கடை ஒன்றில் சிறுமி ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் வங்காளதேச ஆடவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வைரலாகி வரும் காணொளி தொடர்பில் அந்தக் குற்றச்சாட்டை போலீசார் வன்மையாக மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் இன்னமும் 2017 ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலிய குற்றவியல் சட்டத்தின் கீழ் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை தயாராகி வரும் அதே வேளையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க முன்வர வேண்டும் என்று ஏசிபி நாஸ்ரோன் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.








