Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மைஏர்லைன்க்கு புதிய உரிமையாளர்
தற்போதைய செய்திகள்

மைஏர்லைன்க்கு புதிய உரிமையாளர்

Share:

மலேசியாவில் ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியை கொடுத்து வரும் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன் புதிய உரிமையாளர் கையில் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய வான் போக்குவரத்துத்துறையில் புதிய வரவாக உதயமான மைஏர்லைன் கடந்த 11 மாத காலமாக வெற்றி நடைப் போட்டு வரும் வேளையில் அந்த நிறுவனம் மேலும் போட்டியிடத்தக்கதாக செயல்படும் வகையில் அதற்கு கூடுதல் நிதியை முதலீடு செய்வதற்கு புதிய உரிமையாளர் அந்த நிறுவனத்தை ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானத்துறை வட்டாரம் ஒன்று கூறுகிறது.

Related News