மனித உரிமை ஆர்வலர் ஆண்ட்ரி யூனுஸ் மீது நடத்தப்பட்ட அமிலத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய நான்கு ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. நாட்டின் உளவுத்துறைப் பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரிகள், அரசாங்கத்தில் ராணுவத்தின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எதிர்த்து அவர் பேசியதால் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ராணுவத் தரப்பு வழக்கறிஞர்கள் இந்த நால்வருக்கும் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். இந்தத் தாக்குதல் நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஆர்வலர்கள், வழக்கை பொது நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்
மனித உரிமை ஆர்வலர் மீதான அமிலத் தாக்குதல்: ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்
Related News

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

ட்ரோன் தடையையும் கடந்து சரியான நேரத்தில் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம்

நேபாளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பங்கள் நாளை விஸ்மா புத்ராவை சந்திக்கின்றன

ஈப்போவில் மூன்று தெருநாய்கள் இறந்து கிடப்பு

நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் சவால்


