Oct 18, 2026
Thisaigal NewsYouTube

நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்

ஷா ஆலம், அக்டோபர் 07-

மாவட்ட போலீஸ் நிலையம் ஒன்றின் குற்றவியல் விசாரணை அறைக்குள் விருந்துபசரிப்பு நடத்தியதாக நம்பப்படும் போலீஸ் உயர் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்கள் உடனடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த விருந்து உபசரிப்பில் வெளியிலிருந்து வந்த மூன்று பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் உடன் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதிக சத்தமாக பாடல்களை ஒலியேற்றிக்கொண்டு, கூத்தும் கும்மாளமும் போட்டதாக நம்பப்படும் இச்சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து அந்த உயர் போலீஸ் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →