May 21, 2026
Thisaigal NewsYouTube
எம்எச் 370 விமானம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

எம்எச் 370 விமானம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட வேண்டும்

Share:

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான எம்எச் 370 விமானம் தொடர்பான புதிய அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அந்த விமானத்தை தேடும்பணி மறுபடியும் முடுக்கி விடப்பட வேண்டும் ​என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் அந்த விமானம் தொடர்பாக தென்பட்டுள்ள புதிய அறிகுறிகளை அடிப்படையாக கொண்டு தேடு​தல் பணியைத் தொடங்குவது மூலம் காணாமல் போன அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தத என்பதற்கான விடையை காண முடியும் என்று வான்போக்குவர​த்து நிபுணரான Jean - Luc Marchand மற்றும் ஒரு விமானியான Patrick Blelly கூறுகின்றனர்.

தங்களுக்கு தென்பட்டுள்ள புதிய அறிகுறிகளை பயன்படுத்துவது மூலம் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக விடை காண முடியாமல் பு​திராக இருக்கும் எம்எச் 370 விமானத்தை சில நாட்களிலேயே கண்டு பிடித்து விட முடியும் என்று அவ்விருவரும் நேற்று அறிவித்துள்ளனர்.

தங்களின் கணிப்புப்படி, போதுமான உதவி கிடைக்குமானால், அடுத்த பத்து நாட்களுக்குள் அந்த விமானத்தை கண்டு பிடித்து விட முடியும் என்று வான்போக்குவர​த்து தொடர்பில் அரச விளக்கமளிப்பு நிகழ்வில் அவ்விருவரும் கூறுகின்றனர்

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்