Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிராம மக்களுக்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்திய ராட்ஷய மலைப்பாம்பு பிடிபட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிராம மக்களுக்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்திய ராட்ஷய மலைப்பாம்பு பிடிபட்டது

சிக், நவ.15-


கெடா, சிக், கம்போங் பொங்கோல் சிக் டாலாம் என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களுக்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்திய ராட்ஷச மலைபாம்பு பிடிபட்டது.

அந்த கிராமத்து வீடு ஒன்றின் அருகில் குரங்கு ஒன்றை விழுங்கியப் பின்னர் நகரமுடியாமல் கிடந்த அந்த ராட்ஷச மலைபாம்பும் கிடந்தது.

அதனை பார்த்த பொது மக்கள், பொது தற்காப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புப்படை வீரர்கள் 100 கிலோ எடை கொண்ட அந்த ராட்ஷச மலைப்பாம்பை மிக லாவகமாக பிடித்தனர்.

6 மீட்டர் நீளமுள்ள அந்த மலைப்பாம்பு, வனவிலங்கு, தாமான் நெகாராவிற்கு ஒப்படைக்கப்படவிருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →