Mar 29, 2026
Thisaigal NewsYouTube
எரிதிரவக வீச்சு, பெண்ணுக்கு தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

எரிதிரவக வீச்சு, பெண்ணுக்கு தடுப்புக் காவல்

Share:

பாச்சோக், மே.26-

வாடிக்கையாளரைப் போல் நடித்து, ஸ்பா சிகிச்சை மையத்தின் நடத்துநர் மீது எரிதிரவக வீச்சி, நடத்தி,முகத்தை அலங்கோலப்படுத்தியதாக நம்பப்படும் பெண்ணுக்கு தடுப்புக் காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 5 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 38 வயதுடைய அந்தப் பெண்ணுக்கு எதிரான விசாரணை முடிவடையாததால், தடுப்புக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 17 ஆம் தேதி கிளந்தான், கோல கிராய், பெரிஸ் குபுர் பெசாரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஸ்பா மையத்தின் உரிமையாளரான 27 வயது நோர் பாஃஸியேரா மூடா என்பவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினார்.

Related News