Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர பேராக் ஜசெக ஒருமனதாக ஆதரவு
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர பேராக் ஜசெக ஒருமனதாக ஆதரவு

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு பேராக் ஜசெக, ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் அரசாங்கத்தில் நீடிப்பது அவசியம் என மாநில ஜசெக தெரிவித்துள்ளது.

நீதித்துறை சுதந்திரம், ஊழல் ஒழிப்பு, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்களைத் தொடரவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும் ஒற்றுமை அரசாங்கத்தில் பதவிக்காலம் முடியும் வரை ஜசெக நீடிக்க வேண்டும் என அக்கட்சியின் பேராக் மாநிலத் தலைமை கூறியுள்ளது.

ஜசெக, அரசாங்கத்தில் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது அரசாங்கப் பதவிகளில் இருந்து விலக வேண்டுமா என்பதை முடிவு செய்ய வரும் ஞாயிற்றுக்கிழமை 4,264 ஜசெக பேராளர்கள் ஒன்றுக்கூடுகின்றனர்.

Related News