Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி
தற்போதைய செய்திகள்

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

Share:

லஹாட் டத்துவில் ஊடுருவல் மற்றும் மோதல் சம்பவம் நிகழ்ந்து சுமார் 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து வெளிநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க மலேசிய அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பு நிலைமையை நேரடியாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லஹாட் டத்து சம்பவமானது அப்பகுதி மக்களை மட்டுமின்றி, அதன் சுற்றுலாத் தளங்களையும் பெருமளவில் பாதித்ததாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

என்றாலும், தற்போது நிலைமை பெரிதும் மேம்பட்டு, மக்கள் நம்பிக்கையுடன் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால், வெளிநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நேரடி அணுகுமுறை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் மூன்று நாட்கள், இரண்டு இரவு பயணமாக சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அங்கு காடுகள், தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நிலைமையை அனுபவத்தின் மூலம் அறிந்துகொள்ள உள்ளனர்.

10 மாவட்டங்களை உள்ளடக்கிய சபா கிழக்குப் பாதுகாப்புக் கட்டளையான ஸ்க்கோம், அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றது.

இந்த முயற்சியின் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களது குடிமக்களுக்கான பயண எச்சரிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் இஸ்மாயில் சபாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்