Aug 12, 2026
Thisaigal NewsYouTube
தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்
தற்போதைய செய்திகள்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

Share:

தபூங் ஹாஜி யாத்ரீகர்கள் நிதி வாரிய நிர்வாகத்தில் மீண்டும் முறைகேடுகள் ஏற்படாத வகையில் கடுமையான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று நடைபெற்ற 10 மணி நேரத்துக்கும் மேலான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில், 1955-ஆம் ஆண்டு தபூங் ஹாஜி சட்டத்தில், ஆர்சிஐ விசாரணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி ஹசன், அரச விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தபூங் ஹாஜி தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ரஷீத் ஹுசேன் தலைமையிலான இக்குழுவில், Bank Negara ஆளுநர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத் கப்பூர் மற்றும் பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் தலைவர் டத்தோ முகமத் பைஸ் அஸ்மி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தபூங் ஹாஜி நிதி மற்றும் முதலீடுகள், பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும், ஹஜ் நிர்வாகம் சமய விவகாரங்களுக்கான அமைச்சரின் மேற்பார்வையிலும் இருக்கும் என்றும், தபூங் ஹாஜி தனி நிறுவனமாகத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குக... | Thisaigal News