Aug 12, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

பேராக் மாநிலம் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த அஹமட் பைஸ் முகமத் ரவுஹி, சைத் ஸாரி, ராட்ஸ்வான் சுபோ மற்றும் அப்துல் ஹலீம் முகமத் நிசா ஆகிய நால்வரும், அங்கு வசித்து வந்த மற்றொர் நபரின் மரணத்திற்கு காரணமானதாக, இன்று புதன்கிழமை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இவ்வழக்கானது உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டதால் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டின்படி, அஹமட் பைஸ், 54 வயதான முகமத் பவுசீர் ஹுசேன் என்பவரை கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பராமரிப்பு மையத்தில் கொலை செய்ததாகவும், மற்ற மூவரும் அவரின் மரணத்திற்கு காரணமானதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

அஹமட் பைஸ் மீது குற்றவியல் சட்டம், 302-ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற மூவர் 304(a) மற்றும் 34ஆவது பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அஹமட் பைஸ்-க்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம். மற்ற மூவருக்கும் 30 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

நால்வருக்கும் பிணை வழங்கப்படாத நிலையில், இவ்வழக்கானது வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது

Related News

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி