Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Share:

2026 தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 26 முதல் 31ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் முனையக் கட்டுப்பாட்டு வான்வெளிப் பகுதி, தற்காலிகமாக மூடப்படும் என மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையமான மலேசியா வான் போக்குவர்த்து துறை (சி.எ.எ.எம்) அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் 26 முதல் 28-ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில், ஒத்திகைக்காகவும், ஆகஸ்ட் 29 மற்றும் 31ஆம் தேதிகளில், காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை முழு ஒத்திகை மற்றும் அதிகாரப்பூர்வ விமான அணிவகுப்பிற்காகவும், கே.எல்.ஐ.ஏ-வில் விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இந்த நேரங்களில் கே.எல்.ஐ.ஏ வழியாகப் பயணிக்கும் பயணிகள், தங்களது விமான நேரங்களில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் விமான நிறுவனங்களிடம் நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சி.எ.எ.எம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன்களைப் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி