Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி
தற்போதைய செய்திகள்

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

Share:

லெபனான் நாட்டைச் சேர்ந்த நகை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்.ஏ.எல்-க்கு செலுத்த வேண்டிய 67.46 மில்லியன் ரிங்கிட்டை, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள வரை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், முழுத் தொகையையும் இருதரப்பு வழக்கறிஞர்களின் கூட்டு வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரோஸ்மா-வின் மேல்முறையீடு தோல்வியடையும் பட்சத்தில் அத்தொகையானது குளோபல் ராயல்டி நிறுவனத்திற்குக் கிடைப்பதையும், வெற்றி பெற்றால் அத்தொகையானது ரோஸ்மா-விடமே திரும்புவதையும் இந்த ஏற்பாடு உறுதி செய்யும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 10-ஆம் தேதி, குளோபல் ராயல்டி-க்கு 67.5 மில்லியன் செலுத்துமாறு ரோஸ்மா-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ரோஸ்மாவிற்கு பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட 44 ஆடம்பர நகைகளில் 43 நகைகள் திருப்பி வழங்கப்படவில்லை எனக் கூறிய அந்நிறுவனம், இழப்பீடு கோரி, அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி