Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Share:

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 54(1)-ன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நாடாளுமன்ற சபாநாயகர் தான் ஸ்ரீ டாக்டர் ஜோஹாரி அப்துல்-ம், காலியாகியுள்ள அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று ஆகஸ்ட் 11-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் ஜோஹாரி அப்துல்- யிடமிருந்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்பு கிடைத்ததாக ரம்லான் ஹாரூன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் வோங் சென் -ன் ராஜினாமா கடிதம் தனக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்ததை ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து