Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

Share:

சீனாவின் ஹைக்கூ நகருக்கும் பினாங்கிற்கும் இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதன் மூலம் பினாங்குடன் நேரடி விமான இணைப்பைக் கொண்டுள்ள சீன நகரங்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரிக்கும் என மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரக் குழுத் தலைவர் வோங் ஹோன் வை தெரிவித்துள்ளார்.

ஹைனான் ஏர்லைன்ஸ் இயக்கும் இந்த விமானச் சேவை வாரத்திற்கு இருமுறையாக புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

முதல் விமானமானது ஹைக்கூ மேலான் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு, மலேசிய நேரப்படி இரவு 8.45 மணியளவில் பினாங்கை வந்தடையும்.

திரும்பும் விமானம் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1 மணிக்கு ஹைகோ சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான இணைப்பு சீன சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்ப்பதுடன், இரு நகரங்களுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்துறை, கலாசாரம், படைப்பாற்றல் துறை மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் என வோங் ஹோன் வை குறிப்பிட்டுள்ளார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம் | Thisaigal News