Jan 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மக்கள் தொகை அதிகரிக்கவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

மலேசிய மக்கள் தொகை அதிகரிக்கவிருக்கிறது

Share:

மலேசியாவின் மக்கள் தொகை இவ்வாண்டில் 2.1 விழுக்காடாக அதிகரிக்கவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் 3 கோடியே 27 லட்சமாக இருந்த மலேசிய மக்கள் தொகை, இவ்வாண்டில் 3 கோடியே 34 லட்சமாக அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய புள்ளி விவர இலாகா கூறுகிறது.
மலேசியாவில் அதிகரித்து வரும் மலேசியப் பிரஜைகள் அல்லாதவர்களின் எண்ணிக்கை உயர்வின் காரணமாக மலேசிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று புள்ளி விவர இலாகா கூறுகிறது. எனினும் மலேசிய மக்கள் தொகை அதிகரிப்புக்கும், மலேசியப் பிரஜை அல்லாதவர்களின் எண்ணிக்கை உயர்வுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து புள்ளிவிவர இலாகா விளக்கவில்லை.

இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டில் 25 லட்சமாக இருந்த மலேசியப் பிரஜைகள் அல்லாதவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் 30 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவ்விலாகா கூறுகிறது.

Related News