கோத்தா பாரு, அக்டோபர்.07-
கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி கிளந்தான், பாசீர் பூத்தேவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது, மூன்று ஆடவர்களை அடைத்து வைத்திருந்தது தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட எட்டு பேர், கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
20 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எண்மரும் கடந்த செப்டம்பர் 25 க்கும் 20 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பாசீர் பூத்தே, ஜாலான் பந்தாய் பிசிக்கான் பாயு என்ற இடத்தில் சொத்துக்களைக் கேட்டு, ஆயுத முனையில் மூன்று ஆடவர்களை அடைத்து வைத்து அச்சுறுத்தி வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் மூன்று ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எண்மரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








