Oct 3, 2026
Thisaigal NewsYouTube

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிறுவனங்கள் உதவி: பேங்க் நெகாரா அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிறுவனங்கள் உதவி: பேங்க் நெகாரா அறிவிப்பு

நேபாள - சீன எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் குடும்பங்களுக்கு, நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்க நிதிச் சேவை நிறுவனங்கள் தயாராக இருப்பதாக பேங்க் நெகாரா மலேசியா அறிவித்துள்ளது.

இந்த உதவிகளில் கடன் தவணைகளை தற்காலிகமாக ஒத்திவைத்தல், கட்டணங்கள் மற்றும் சேவைக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்தல், சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை ஆவணத் தேவைகளில் நெகிழ்வுத்தன்மை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும் என்றும் பேங்க் நெகாரா வலியுறுத்தியுள்ளது.

மேலும், காப்பீடு அல்லது தகாஃபுல் சான்றிதழ்களின் நிலையை சரிபார்த்து உறுதி செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், காப்பீட்டு மற்றும் தகாஃபுல் இழப்பீட்டுத் தொகைகளை விரைவாக வழங்கவும் நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் உதவிகளும் வழங்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட மலேசியர்களின் குடும்பத்தினர் உரிய நிதி நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பேங்க் நெகாரா மலேசியா அறிவுறுத்தியுள்ளது.

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய, நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாயமான 55 மலேசியர்களில் ஒருவர், பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நபர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு நேரில் சென்றதாகவும், அங்கு அதிகாரிகள் அவரது அடையாளத்தைச் சரிபார்த்து அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →