பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் பலாபலனாக 4 ஆயிரத்து 60 கோடி வெள்ளி முதலீட்டுகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
வான் போக்குவரத்து, ஆள்பலம், முதலீடு, வர்த்தகம் ஆகிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புக்ள் பெறப்பட்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் உள்ள ஃபியூட்சர் எனர்ஜி கம்பனி என்ற நிறுவனம் எரிபொருள் திட்டத்தில் ஆர்வம் காட்டியிருப்பதும் இதில் அடங்கும் என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.








