May 5, 2026
Thisaigal NewsYouTube
நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் நான் பங்கேற்கவில்லை – ஐஜேஎம் தலைவர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் நான் பங்கேற்கவில்லை – ஐஜேஎம் தலைவர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.09-

தமக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளையடுத்து, தான் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபடவில்லை என ஐஜேஎம் கார்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் டான் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது நிர்வாகப் பொறுப்பு வகிக்காத தலைவராகத் தான் செயல்பட்டு வருவதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் சட்டங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் கிருஷ்ணன் டான் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், கிருஷ்ணன் டான் மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக எழுந்த பணமோசடி குற்றச்சாட்டுகளை ஐஜேஎம் நிறுவனம் மறுத்தது.

மேலும், இது தொடர்பாக, யுகேவின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகமான SFO-வால் நடத்தப்பட்டு வரும் ஊழல் அல்லது பணமோசடி விசாரணை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.

Related News