கிள்ளான், நவம்பர்.12-
கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் ஜாலான் பாபான் குடியிருப்புப் பகுதியில் இன்று நடைபெற்ற வீடுடைப்பில் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி மலேசிய சோஷலிச கட்சியான PSM- மின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், சமூக ஆர்வலர் M. Mythreyar மற்றும் குடியிருப்பாளர் எம். லோகேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
186 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டதைச் சமூக ஆர்வலர் Mythreyar உறுதிப்படுத்தினார். இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஜாலான் பாபான் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைக்கப்படும் பணிகள் இன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கியது.
இந்த நிலப்பகுதியைக் கொள்முதல் செய்ததாகக் கூறப்படும் மேம்பாட்டாளர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண்வாரி இயந்திரத்தின் மூலம் வீடுகளை உடைக்கும் பணியை மேற்கொண்டார்.
விசாரணைக்காகத் தாங்கள் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக Myyhreyer தெரிவித்தார்.








