Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மருத்துவர் தாக்கப்பட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மருத்துவர் தாக்கப்பட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது

கோலாலம்பூர், டிச. 7-


பேராவில் மருத்துவமனை ஒன்றில் உதவி மருத்துவ அதிகாரியால் மருத்துவர் ஒருவர், தாக்கப்பட்ட சம்பவத்தை சாதாரணமாக கருத முடியாது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதனை சுகாதார அமைச்சுடன், போலீஸ் து றையும் விசாரணை செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பேரா, கிரீக் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்த மருத்துவ அதிகாரிக்கு எச்சரிக்கை கடிதம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு
பொதுச்சேவைத்துறை முன்னாள் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ போர்ஹான் டோலாக் தலைமையில் சுயேட்சை விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி விளக்கினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →