Jul 1, 2026
Thisaigal NewsYouTube
"வழக்கறிஞர் நிறுவனத்திற்குள் சிக்கிய இருவர் பாதிப்பு!"
தற்போதைய செய்திகள்

"வழக்கறிஞர் நிறுவனத்திற்குள் சிக்கிய இருவர் பாதிப்பு!"

Share:

பினாங்கின் பாரம்பரியப் பகுதியில் உள்ள ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடத்திற்குள் இருவர் சிக்கினர். .

லெபு கிங் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி கடைவீட்டை கொண்ட அந்த சட்ட அலுவலகத்த்தில் மதியம் 12.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பழமையான கட்டிடத்தில் இருவர் சிக்கியிருந்ததை பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியது. மரத்தினால் ஆன உட்புறக் கட்டமைப்பைக் கொண்ட அந்தக் கட்டிடத்தில் தீ மிக வேகமாகப் பரவியது.

கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த இருவரில் ஒருவர் மதியம் 1.05 மணி அளவில் மீட்கப்பட்டார் என்று தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

அந்த பழமையான கடைவீடு, சுமார் 70% சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News