Dec 3, 2025
Thisaigal NewsYouTube
“மத மாற்ற நிகழ்வில் பிரதமர் பங்கேற்றதை சர்ச்சையாக மாற்ற வேண்டாம்:
தற்போதைய செய்திகள்

“மத மாற்ற நிகழ்வில் பிரதமர் பங்கேற்றதை சர்ச்சையாக மாற்ற வேண்டாம்:

Share:
  • பினாங்கு முஃப்தி”

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மத மாற்ற நிகழ்வை சர்ச்சைக்குரிய விவாதமாக மாற்றக் கூடாது என்று பினாங்கு முஃப்தி டத்தோஸ்ரீ வான் சலீம் வான் முகமட் நூர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் அன்வார், கிள்ளானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இருந்தபோது சில தரப்பினரின் அழைப்பை நிறைவேற்றுவதற்காகதான் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக பினாங்கு முஃப்தி விளக்கம் அளத்தார்.

இந்த விஷயத்தில் அமைதி காக்குமாறு பொதுமக்களை வான் சலீம் கேட்டுக்கொண்டார்.

அடிப்படையில், ஒரு குடிமகனின் மத மாற்றத்திற்கு தலைமை தாங்கும் பிரதமரின் நடவடிக்கை ஒரு சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது. ஒருவேளை தமக்கு விடுத்த அழைப்பை நிறைவேற்றுவதற்காக பிரதமர் அவ்வாறு செய்திருக்கலாம்.

ஆனால், எந்தவொரு சர்ச்சையையும் தவிர்க்கும் பொருட்டு மதம் மாற்றம் தொடர்பான கடமையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத அதிகாரத்திற்கும் உட்பட்ட “தக்வா” போன்ற குழுக்களிடமே மட்டுமே விட்டு இருக்க வேண்டும்.

ஏனென்றால், பிரதமருக்கு வேறு பல பாரிய பொறுப்புகள் உள்ளன, அவர் கவனிக்க வேண்டும் என்று பினாங்கு முஃப்தி குறிப்பிட்டார்.

நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தில் இந்த பிரச்சினை பெரும் அசௌகரிய சூழலை உருவாக்காது என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கிள்ளானில் உள்ள அர்-ரஹிமியா மசூதியில், இந்து இளைஞரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றும் வைபவத்தை அன்வார் தலைமை தாங்கியதை ஒரு தரப்பு சாடி வருவதைத் தொடர்ந்து பினாங்கு முஃப்தி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Related News