ஜூரு, அக்டோபர்.19-
பினாங்கு, ஜூரு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தாயும் மகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமையலறையில் 51 வயது மனைவியின் சடலமும், மேலே உள்ள அறையில் இரத்த வெள்ளத்தில் 11 வயது மகளின் சடலமும் கிடந்த நிலையில், பாதுகாப்பு ஊழியராகப் பணி புரியும் 57 வயது கணவரை இரவு காவற்படையினர் உடனடியாகக் கைது செய்ததாக பினாங்கு மாநிலக் காவற்படையின் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தின் நோக்கம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சடலங்கள் உடற்கூறு ஆய்விற்காகச் செபராங் ஜெயாவில் உள்ள தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டத்தோ அஸிஸீ உறுதிப்படுத்தினார்.