Oct 8, 2026
Thisaigal NewsYouTube

கம்போங் மாக்காவ் சுவா மக்களுக்கு நிலையான வீட்டுத் தீர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கம்போங் மாக்காவ் சுவா மக்களுக்கு நிலையான வீட்டுத் தீர்வு

நீண்டகாலமாக குடியிருப்பு நிச்சயமற்ற நிலையில் இருந்த பினாங்கு, கம்போங் மாக்காவ் சுவா பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களுக்கு பினாங்கு மாநில அரசு இன்று ஆர்எம்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கியது.

பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ச்டி சுந்தராஜூ சோமு தலைமையில் நடைபெற்ற சாவி வழங்கும் நிகழ்வில், இந்தக் குடும்பங்களுக்கான நீண்டகால வீட்டுப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்கப்பட்டது.

நில உரிமையாளர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்ததால், பல ஆண்டுகளாக அங்கு வசித்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள் என்பதால், புதிய வீடுகளை வாங்குவதற்கான பொருளாதார வசதியும் போதுமானதாக இல்லை.

இதையடுத்து, பினாங்கு மாநில அரசும் எல்என்பிபியும் இணைந்து தாமான் பெகாத்ரா இண்டாவில் 42 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ரூமா முத்தியாராகூ வகை வீடுகளை வாடகை-கொள்முதல் திட்டத்தின் கீழ் வழங்கி, வீட்டிற்கான சாவியும் இன்று அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

கடநத் ஏப்ரல் 7 ஆம் தேதி நிறைவடைந்த ரூமா பங்சா பெகாத்ரா இண்டா திட்டத்தில் மூன்று கட்டிடங்களில் 336 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 650.8 சதுர அடி பரப்பளவுடன், ஒரு வாகன நிறுத்துமிடத்தையும் கொண்டுள்ளது. கம்போங் மாக்காவ் சுவா மக்களின் பிரச்சினை தனியார் நிலம் தொடர்பானதாக இருந்தபோதிலும், அவர்களின் நலனில் இருந்து மாநில அரசு விலகி நிற்கவில்லை. இந்த வீடுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தொகை தலா 240 ரிங்கிட்தான். 15 ஆண்டுகளில் அந்த வீடுகள் அவர்களுக்கு சொந்தமாகும் என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →