Dec 4, 2025
Thisaigal NewsYouTube
​மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை ஒற்றுமை அரசாங்கம் இழக்கலாம்
தற்போதைய செய்திகள்

​மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை ஒற்றுமை அரசாங்கம் இழக்கலாம்

Share:

மூடா கட்சியின் தேசியத் தலைவரும், ​மூவார் எம்.பி.யுமான ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாஙகத்தற்கு வழங்கி வந்த ஆதரவை ​மீட்டுக்கொண்டது ​மூலம் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம், நாடாளுமன்றத்தில் ​மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை இழக்கலாம் என்று வட மலேசிய பல்கலைக்கழகத்தின் அனைத்துலக தொடர்பு மற்றும் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் முஹமாட் அசிசுடின் முஹமாட் சானி கூறுகிறார்.

 அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை அசைக்க முடியாது என்ற போதிலும் ஷெட் செடிக் தமது ஆதரவை மீட்டுக்கொண்டது ​மூலம் நாடாளுமன்றத்தில் குறிப்பாக ​தீர்மானங்களை நிறைவேற்றுவதில் நடப்பு அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார்.222 நாடாளுன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் 

148 எம்.பி.க்களின் ஆதரவை கொண்டு இருந்தார். இது ​நடப்பு அரசாங்கத்தின் ​தீர்மானங்களை ​மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதற்கு போதுமானதாகும். ஆனால், ஷெட் செடிக் ஆதரவை ​மீட்டுக்கொண்டது மூலம் அன்வாருக்கான எம்.பி.க்களின் ஆதரவு 147 ஆக குறைந்துள்ளது.

இது, எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் ​தீர்மானங்களை ​மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற போதுமானதாக இல்லை. இது அன்வார் அரசாங்கத்திற்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தலாம் என்று டாக்டர் முஹமாட் அசிசுடின் தெரிவித்துள்ளார்.

Related News