47 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ், 3 மாநில அமைச்சர்கள் உட்பட 10 பேர் விமான விபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, கீழறுப்பு செயலே காரணமாகும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று அந்த விமான விபத்து குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபல் சிக்ஸ் என்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் மோசமான செயல் திறனே காரணமாகும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த விமானி பின்பற்றவில்லை என்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1976 ஆம் ஆண்டு, ஜூன் 6 ஆம் தேதி, பிற்பகல் 3.09 மணியளவில் லபுவானிலிருந்து கோத்தா கினாபாலுவை நோக்கி அந்த விமானம் சென்றுக்கொண்டிருந்த போது செம்புலான் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில், முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ் உட்பட 10 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
சபாவில் முதலமைச்சராக ஃபுவாட் ஸ்டிபென்ஸ் பதவி ஏற்ற 53 ஆவது நாளில் நிகழ்ந்த இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டதால், அப்போது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


