மலேசியாவில் 54.4 விழுக்காடு பெரியவர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார - நோயுற்ற நிலை கணக்கெடுப்பு, என்எச்எம்எஸ் (NHMS) தெரிவித்துள்ளது.
நாட்டில் 49.9 விழுக்காடு பெரியவர்கள் உடல் இயக்கம் குறைந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கெஃப்லி அகமட் கூறினார்.
இதன் காரணமாக தொற்றா நோய்களான NCD-களுக்கான சிகிச்சை மற்றும் நிர்வாகச் செலவாக நாட்டுக்கு ஆண்டுதோறும் 64.2 பில்லியன் ரிங்கிட் செலவாகிறது.
NCD பாதிப்புகள் பணியிட உற்பத்தித் திறன் குறைவு, மருத்துவ விடுப்பு மற்றும் பணியில் முழுமையான செயல்திறனை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், NCD காரணமான உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








