கோலாலம்பூர், அக்டோபர்.11-
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவர்களின் ஆலோசனைச் சேவைக் கட்டண விகிதம் குறைந்தபட்சம் 10 ரிங்கிட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
மருத்துவம் குறித்து பொதுவான ஆலோசனைப் பெறுவதற்கு தொடர்ந்து 10 ரிங்கிட் கட்டணம் நிலைநிறுத்தப்பட்டு இருப்பது மூலம் அதிகரித்து வரும் சுகாதார சேவைக்கான மருத்துவக் கட்டண சுமையிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவச் சேவையைப் பெறுவதற்கு மருத்துவக் காப்புறுதி வசதியைக் கொண்டிருக்காத வசதி குறைந்த மக்கள் , நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாமல் குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆலோசனைப் பெறுவதற்கு இந்த 10 ரிங்கிட் திட்டம் பேருதவியாக இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.








