Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில் கோர விபத்து: சிறுமி உட்பட நால்வர் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில் கோர விபத்து: சிறுமி உட்பட நால்வர் பலி

Share:

குளுவாங், ஜூன்.01-

ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில், சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைக்கு எதிரே இன்று மதியம் ஏற்பட்ட 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் 10 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 1.16 மணியளவில் டோயோட்டா வியோஸ், பெரோடுவா அல்சா, புரோட்டான் வீரா, மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து நேர்ந்ததாக ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, டோயோட்டா வியோஸ் காரில் சிக்கியிருந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது. பலியானவர்கள் 36 வயது Aiman Rashid, 10 வயது சிறுமி Nur Airish Syifa Sidek, 33 வயது Nor Azlina Abd Latif மற்றும் 73 வயது Semek Mat Soh என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related News