கோலாலம்பூர், டிசம்பர்.17-
மலேசியாவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்குச் செல்லும் விமானத்தில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைக் கடத்த முயன்ற, மலேசிய பெண் ஒருவர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பயணப் பெட்டியில் இரண்டு கிப்போன் வகைக் குரங்குகளை அடைத்து வைத்திருந்த அவர், மும்பைக்குக் கடத்த முயன்றதாக நம்பப்படுகின்றது.
முன்னதாக அந்த இரண்டு குரங்குகளும் இந்தோனேசியாவில் இருந்து, மலேசியாவிற்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில், கேஎல்ஐஏ முனையம் 1-இல் 38 வயதான அப்பெண் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்துள்ளார்.








