உள்ளூர் வெள்ளை அரிசி அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெள்ளை அரிசி என்று முத்திரை குத்தப்படாமல் வெள்ளை அரிசிக்கு ஒரே ஒரு தரத்தை மட்டுமே கொண்டு வர வேண்டும் என நெல், அரிசி ஒழுங்குமுறைக் குழுப் பிரிவு, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுகு மலேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
தரமான அரிசி என்று வரும்போது, பயனீட்டாளர்கள் நிலையில் எமாற்றப் படுவதைத் தவிர்ப்பதோடு, மொத்த வியாபாரிகள் நிலையில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் தடுப்பதற்கும் இந்த முறை வழி வகை சேயும் என அச்சங்கத்தின் தலைவர் மர்சுகி ஓத்மான் கூறினார்.
உள்ளூர் அரிசியையும் இறக்குமதி அரிசியையும் கலந்து வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட அரிசி எனக் குறிப்பிட்டு வரம்பு மீறிய விலையில் சில மொத்த வியாபாரிகள் விற்பனை செய்யப்படுவதை மர்சுகி ஓத்மான் சுட்டிக் காட்டி இந்தப் பரிந்துரையை அவர் முன்வைத்தார்.
உள்நாட்டில் விளையும் அரிசி தரமானது என அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், இறக்குமதி அரிசியே புகழப்படுகிறது. இரு வேறு அரிசிகள் இரு வேறு விலையில் சந்தையில் இருக்கின்ற வரையில் பதுக்கலும் கடத்தலும் தொடர்ந்து நடக்கும் எனறார் அவர்.








