Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நன்னெறி, வாழ்வியல் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நன்னெறி, வாழ்வியல் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.15-

பள்ளிகளில் நன்னெறி மற்றும் வாழ்வியல் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் சமூகவியல் முதிர்நிலை பேராசிரியர் முனைவர் டாக்டர் முகமட் நோராஸ்வான் எ. பாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

நன்னெறிப் பண்புகளையும், மனித வாழ்வியல் மதிப்பீடுகளையும் மாணவர்களுக்கு உணர்த்துவது மூலம் மாணவர்கள் மத்தியில் பாலியல் பலாத்காரச் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று அந்த பேராசிரியர் பரிந்துரை செய்துள்ளார்.

அண்மையில் மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மூன்றாம் படிவ மாணவியை ஐந்தாம் படிவ மாணவர்கள், பாலியல் பலாத்காரம் புரிந்த சம்பவம் தொடர்பில் இன்று உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய நீண்ட கட்டுரையில் நன்னெறி மற்றும் வாழ்வியில் கல்வியின் மதிப்பீடுகளையும், அக்கல்வி மாணவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் டாக்டர் முகமட் நோராஸ்வான் மிக விரிவாக விவரித்துள்ளார்.

Related News