சுங்கை பட்டாணி, செப்டம்பர்.24-
சுங்கை பட்டாணி பீடோங் பகுதியில் ஒரு டன் லோரியில் 6 அந்நியர்களைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, ஜாலான் பெக்கான் பீடோங் சாலையில் நடைபெற்ற ஓப்ஸ் பிந்தாஸ் சோதனையின் போது, லோரி ஒன்றில் 3 மியான்மார் ஆடவர்களும், 3 இந்தோனேசிய ஆடவர்களும் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அந்த லோரி ஓட்டுநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கோல மூடா தலைமை காவல்துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் பின் ரம்லான் தெரிவித்துள்ளார்.








