பால் பானத்தை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரி ஒன்று, தீப்பிடித்துக்கொண்டதில் முற்றாக அழிந்தது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 428 ஆவது கிலோ மீட்டரில் புக்கிட் பெருந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை முற்றாக அணைத்த போதிலும் வொல்வோ ரகத்திலான அந்த டிரெய்லர் லோரி 90 விழுக்காடு சேதமுற்றது என்று தீயணைப்பு இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் எதவும் ஏற்படவில்லை. அந்த கனரக லோரியின் பின் டயரின் ஊராய்விலிருந்து தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








