Sep 27, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியின் தீர்வையற்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

லங்காவியின் தீர்வையற்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை - பிரதமர் அன்வார்

Share:

லங்காவியின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அந்தத் தீவின் முழுமையாக தீர்வையற்ற அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சைபர்ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் , லங்காவியில் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, இது குறித்து இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் விரிவாக ஆராய்ந்து வருவதாக அன்வார் கூறினார்.

முன்னதாக, லங்காவியில் வாகனங்கள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வையற்ற தளர்வுகள் நீக்கப்பட்டதால், அதன் ஈர்ப்புத் தன்மை குறைந்துள்ளதாக கெடா சுல்தான் சலேஹுடின் சுல்தான் பத்லிஷா கவலை தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் புகையிலை பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டதும், 3 லட்சம் ரிங்கிட்டிற்கு மேலான வாகனங்களுக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்