மூன்று வயது சிறுமி, நீரில் மூழ்கி மரணம் அடையும் அளவிற்கு அலட்சியமாக இருந்ததாக குழந்தை பராமாரிப்பாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
சித்தி ஐனா நுர்னிசா முஹமாட் என்ற வயதுடைய அந்தப் பெண் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காலை 11.20 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, லொஜிங் ஹைட்டில் ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


