May 22, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் புகைப்படம் வெளியிடப்பட்டது
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் புகைப்படம் வெளியிடப்பட்டது

Share:

கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வேளையில் அவர் IJN னில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை காட்டும் புகைப்படம் ஒன்று இன்று வெளியிடப்பட்டது.

நோய்த் தொற்று காரணமாக துன் மகாதீருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது என்றும், அவர் இன்று காலையில் பத்திரிகைகளை படித்தார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

துன் மகாதீரின் உடல் நிலை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவருக்கு தொடர்ந்து புனர் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே அவர் மருத்துவமனையில் ஓய்வுவெடுக்க வேண்டியுள்ளது என்று IJN- னின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News