May 3, 2026
Thisaigal NewsYouTube
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

Share:

சர்வதேச அளவில் கோவிட் 19 நோய் தொற்று பரவி ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு வழக்கமான கோவிட்-19 தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என உலக சுகாதார அமைப்பான WHO, நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்த பரிந்துரையானது, கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற தடுப்பூசி தொடர்பான நிபுணர்கள் குழுவான SAGE-இன் உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில், பரவலான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், கோவிட்-19 பாதிப்பு குறைந்திருந்தாலும் கூட, வைரஸ் இன்னும் உயிரிழப்புகளையும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகிறது என்று WHO எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, தேசிய சுகாதார அதிகாரிகள் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் WHO வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் நோய்ப்பரவல், மக்கள் தொகை, கோவிட்-19 தடுப்பூசிகள் கிடைப்பது, செலவுத் திறன், ஏற்புத்தன்மை மற்றும் திட்டச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில், உலக நாடுகள் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் SAGE பரிந்துரைத்துள்ளது.

Related News