பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசினிடம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. கோலாலம்பூரில் உள்ள முகைதீனின் அலுவலகத்திற்கு காலை 10 மணியளவில் வருகை தந்த புக்கிட் அமான் போலீசார், அந்த முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இம்மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர்,சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் மதம், இனம், ஆட்சியாளக்ள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியது தொடர்பில் முகைதீனிடம் இரண்டாவது முறையாக இந்த விசாரணை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது.







