ஜார்ஜ்டவுன், அக்டோபர்.29-
சாலையைக் கடக்கும் போது Sports Utility வானத்தினால் மோதப்பட்ட மாது உயிரிழந்த வேளையில் அவரின் இரண்டு வயது மகள் படுகாயத்திற்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.40 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலையில் நிகழ்ந்தது. வெளிநாட்டைச் சேர்ந்தவரான 40 வயது மாது கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேலே மாண்டார்.
அவரின் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும், கடும் காயங்களுக்கு ஆளானார் என்று திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.
57 வயது வாகனமோட்டி, சுங்கை டுவாவில் உள்ள தனது இல்லத்திலிருந்து பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, தாயும், மகளும் திடீரென்று சாலையைக் கடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல் ரோஸாக் குறிப்பிட்டார்.








