கோலாலம்பூர், அக்டோபர்.08-
தொழிலாளர்கள் தங்களுக்கான புடி95 பெட்ரோல் கோட்டா சலுகையை நிறுவனத்தின் வாகனங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகங்கள் பணிக்க முடியாது என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
தங்களுக்கான பெட்ரோல் சலுகையை நிறுவனத்தின் வாகனங்களுக்கும் பயன்படுத்துமாறு நிர்வாகங்கள் பணிக்குமானால் அது குறித்து தொழிலாளர்கள் புகார் செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தனார்.
புடி95 பெட்ரோல் சலுகையானது மலேசியப் பிரஜைகளான தனி நபர்களுக்கு உரியதே தவிர நிறுவனங்களுக்கு அல்ல என்பதையும் டத்தோ ஃபாமி விளக்கினார்.








