Apr 8, 2026
Thisaigal NewsYouTube
MDMA போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் விநியோகம் - அம்பாங் ஜெயாவில் இரண்டு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

MDMA போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் விநியோகம் - அம்பாங் ஜெயாவில் இரண்டு ஆடவர்கள் கைது

Share:

அம்பாங் ஜெயா, தாமான் மெலாவாட்டி பகுதியில், MDMA எனப்படும் போதைப்பொருள் கலந்த vape திரவத்தை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் முதல் கைதானது கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சுமார் 8.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைரில் அனுவார் காலிட் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட சோதனைகளில், சந்தேக நபரிடம் MDMA கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் திரவம் கொண்ட மின்சிகரெட் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், அதே பகுதியில் இந்த போதைப்பொருளை விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டதாக அனுவார் காலிட் தெரிவித்துள்ளார்.

Related News