Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய வன நிதி நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய வன நிதி நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

MFF எனப்படும் மலேசிய வன நிதி நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக Datuk Shah Redza Hussein நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காடுகள் பாதுகாப்பு , சுற்றுச்சூழல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக Shah Redza, MFF இன் எதிர்கால திட்டங்களைக் குறிப்பாக காடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய நிதி வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவார். மேலும் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளையும் அவர் நிர்வகிப்பார் என MFF வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன் Shah Redza, பகாங்கில் உள்ள Rizab Harimau Diraja Al-Sultan Abdullah வை நிர்வகிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்தார். இஃது அவருக்கு வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்கியுள்ளது.

Shah Redzaவின் தலைமையில் நிறுவனம் மேலும் வளர்ச்சி அடையும் என்று MFF இன் தலைவர் Dr Yasmin Rasyid நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக வன பாதுகாப்பு சான்றிதழிலும் கார்பன் ஈடுசெய்தல் திட்டங்களிலும் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்