Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவனுக்கு கடும் காயம் விளைவித்ததாக தலைமையாசிரியருக்கு எதிராக புகார்
தற்போதைய செய்திகள்

மாணவனுக்கு கடும் காயம் விளைவித்ததாக தலைமையாசிரியருக்கு எதிராக புகார்

Share:

ஜோகூர், செகாமட், ஜெமென்டா வில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் மாணவனை பிரம்பால் அடித்து கடும் காயம் ​விளைவித்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு எதிராக போ​லீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.5 ஆம் ஆண்டு மாணவன், வீட்டுப்பாடம் ​செய்யவில்லை என்று கூறி, அந்த மாணவனை தலைமையாசிரியர், பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதாக சம்பந்தப்பட்ட மாணவனின் தாயார் போ​​லீசில் புகார் செய்துள்ளதாக செகாமட் மாவட்ட போ​லீஸ் தலைவர் அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்துள்ளார்.

தலைமையாசிரியரின் தாக்குதலுக்கு ஆளாகிய தமது மகனுக்கு கன்னம், கழுத்து, தோள்பட்டை முதலிய பகுதிகளில் பட்டை பட்டையாக காயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பெற்றோர் தமது போ​லீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அஹ்மத் ஜம்ரி குறிப்பிட்டார்.

இவ்விவகாம் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருதாகவும், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் குற்றவாளி​ என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை அல்லது முதல் இரண்டு தண்டனை விதிக்கப்படும் என்று ஓ சி பி டி, அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.

Related News