Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மெட்ரிகுலோஷன் கல்விக்கான விண்ணப்பிப்பு டிசம்பர் முதல் தேதி தொடங்குகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மெட்ரிகுலோஷன் கல்விக்கான விண்ணப்பிப்பு டிசம்பர் முதல் தேதி தொடங்குகிறது

புத்ராஜெயா, நவ. 28-


2025 – 2026 ஆம் ஆண்டு மெட்ரிகுலோஷன் கல்விக்கான மாணவர் சேர்ப்புக்குரிய முதலாம் கட்ட விண்ணப்பம், வரும் டிசம்பர் முதல் தேதி தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு முந்திய படிப்பான மெட்ரிகுலோஷன் கல்வி வாய்ப்பை பெறுவதற்கு டிசம்பர் முதல் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேவேளையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம், எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இரண்டாம் கட்ட விண்ணப்பமானது, எஸ்பிஎம். தேர்வு முடிவை அடிப்டையாக கொண்டு மாணவரின் தகவல்களை மேம்படுத்திக்கொள்வதாகும் என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →