Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

Share:

பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பிகேஆர், ஜசெக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மாநில அரசாங்கம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஜசெக தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் சிறப்பாகச் செயல்படும் தலைவர்கள் யார் என்பதை மக்கள் தாங்களே மதிப்பீடு செய்து தீர்மானிக்க முடியும் என்றும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் டத்தோஸ்ரீ சுந்தராஜு கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மதிப்பிடுவதில் நாணயத்தின் மதிப்பு முக்கியமான குறிகாட்டியாக விளங்குவதாகச் சுட்டிக்காட்டப்பட்டினார். ஒரு நாட்டின் நாணய மதிப்பு உயர்வதற்கு பல்வேறு காரணிகள் உள்ள நிலையில், அவற்றில் அரசியல் நிலைத்தன்மையும் முக்கியமான காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் மாற்றம் குறித்து முடிவெடுக்கும் போது தற்போதைய சூழ்நிலையையும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மக்கள் கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என மீண்டும் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்தினார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி