Aug 10, 2026
Thisaigal NewsYouTube
2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்
தற்போதைய செய்திகள்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

Share:

வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 10 லட்சம் மலிவு விலை வீடுகளை வழங்கும் இலக்குடன், தேசிய வீடமைப்பு கொள்கையானது கோலாலம்பூரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரான டத்தோ ஸ்ரீ ங்கா கோர் மிங் அறிமுகப்படுத்திய இந்தக் கொள்கையானது, “மக்களை மையமாகக் கொண்ட வீடமைப்பு” என்ற கருப்பொருளில் அமைந்துள்ளது.

இந்தக் கொள்கையில் 6 முக்கிய அம்சங்கள், 17 உத்திகள் மற்றும் 59 செயல்திட்டங்களின் ஆதரவுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வீடுகளின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான சமநிலையின்மை மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

கோலாலம்பூர் KLGCC மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற அறிமுக விழாவில் உரையாற்றிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ங்கா கோர் மிங், தரமான வீடுகள் என்பது வெறும் தங்குமிடத்தை வழங்குவது மட்டுமல்ல; வளமான குடும்பங்கள், ஒற்றுமையான சமூகங்கள் மற்றும் நிலையான நாட்டின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாகும் என்று தெரிவித்தார்.

வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகளை வழங்கும் இந்தக் கொள்கை, நாட்டின் வீடமைப்புத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் மாநில அரசாங்கங்கள், ஊராட்சி அமைப்புகள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து, இந்தக் கொள்கையின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை அமைச்சு உறுதி செய்யும் என்றும் டத்தோ ஸ்ரீ ங்கா கோர் மிங் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News